இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது- தலைமை தேர்தல் அதிகாரி

இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது .விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.
வாக்குப் பதிவு நிறைவு பெற்ற நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது. நாங்குநேரி தொகுதியில் 66.10% வாக்குகளும், விக்கிரவாண்டி – 84.36% வாக்குகளும் பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.