பெரம்பலூர் அருகே சுப்பிரமணி என்பவரது வீட்டின் மேற்கூரையை துளைத்துக் கொண்டு துப்பாக்கி குண்டு பயந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் அருகே மருதடிஈச்சங்காடு கிராமத்திற்கு அருகே துப்பாக்கி சூடு பயிற்சி மையம் உள்ளது. அங்கு அவ்வ்வப்போது துப்பாக்கிசூடு பயிற்சி நடைபெற்று வரும் நிலையில், நேற்று அந்த மையத்தில் பயிற்சி நடைபெற்றது. இந்த நிலையில், நேற்று சுப்பிரமணி என்பவரது வீட்டில் மேற்கூரையை துளைத்துக் கொண்டு துப்பாக்கி குண்டு ஒன்று வீட்டிற்குள் விழுந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், துப்பாக்கிக்குண்டை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குண்டு பாய்ந்த சத்தம் கேட்ட போது, அந்த வீட்டில் உள்ளவர்கள் வெளியில் இருந்ததால், நல்வாய்ப்பாக எந்த சேதமும் ஏற்படவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக, புதுக்கோட்டையில், துப்பாக்கிசூடு மையத்தில் இருந்து குண்டு பாய்ந்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…