அல்வாவுடன் தொடங்கிய பட்ஜெட் மக்களுக்கு அல்வாவுடன் முடிந்தது -கமல்
- நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் 2020 -2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை 2 மணி 41 நிமிடங்கள் வாசித்தார்.
- அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது என கமல் பதிவிட்டு உள்ளார்.
நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் 2020 -2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை 2 மணி 41 நிமிடங்கள் வாசித்தார். இந்த பட்ஜெட் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்ற நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவரும் , நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு பதிவிட்டுள்ளார்.
அதில் ,அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது. நீண்ட உரை, ஆனால் சரியான தீர்வுகள் இல்லை என கமல் பதிவிட்டு உள்ளார்.
அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது.
நீண்ட உரை, ஆனால் சரியான தீர்வுகள் இல்லை.— Kamal Haasan (@ikamalhaasan) February 1, 2020