LIVE: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு முதல் சாதனை செய்த இளையராஜா வரை!
மார்ச் 10 இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் குறித்து கீழே விவரமாக செய்திகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம், தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் பேச திட்டமிட்டுள்ளனர். இன்று தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு ஏப்ரல் 4-ம் தேதி வரை நடக்க உள்ளது.
இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று சென்னை திரும்பி உள்ளார். தமிழராக இருந்து இந்த சாதனை செய்துவிட்டு திரும்பிய இசைஞானி இளையராஜாவுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு
செய்யப்பட்டு இருக்கிறது. விமான நிலையத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அதிகாரிகள் அவரை வரவேற்றுள்ளனர்.