மகளை 2-வது மாடியில் இருந்து தூக்கி வீசிய கொடூர சித்தி கைது..!

குரோம்பேட்டை சேர்ந்த பார்த்திபன் இவரது மகள் ராகவி (6) .இவர் முதல் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ராகவி இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடிப்பட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இதைத்தொடர்ந்து சிட்லபாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சிறுமியின் தாய் சூரியகலா மீது சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது ராகவியை மாடியில் இருந்து தூக்கி வீசியதாக தாய் சூரியகலா ஒப்புக்கொண்டார். இதனால் தாய் சூரியகலா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். சிறுமி ராகவி விற்கு சூரியகலா இரண்டாவது தாய் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025