விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே, சுந்தரேசபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் வரதராஜன் – சவுந்தர்யா தம்பதியினர். கடந்த 15 நாட்களுக்கு முன்பதாக இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. வரதராஜன் பெண் குழந்தையை விரும்பாத காரணத்தால், மருத்துவமனைக்கு சென்று குழந்தையை பார்க்கவில்லை.
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சவுந்தர்யா, 3-வது நாளே தனது கணவர் குழந்தையை கொலை செய்ய எடுத்து சென்றதை பார்த்து, பயத்தில் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து, மாமியார் வீட்டிற்கு சென்று தான் திருந்தி விட்டதாக கூறி மனைவியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனையடுத்து, நேற்று மாலை குழந்தையை காணவில்லை என தேடிய போது, குழந்தை தென்பெண்ணை ஆற்றங்கரையில் புதைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, வரதராஜனை போலீசார் விசாரித்த போது. குழந்தையை கொலை செய்து புதைத்ததை அவர் ஒப்பு கொண்டுள்ளார். இதனையடுத்து, போலீசார் வரதராஜனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பெண் குழந்தை என்பதற்காக பிறந்து 15 நாளே ஆன குழந்தையை இவ்வாறு கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…