பெற்ற தந்தையை தனது மகனை கொன்ற கொடூர சம்பவம்! இந்த தந்தை எதற்காக இந்த முடிவு எடுத்தார் தெரியுமா?

Default Image

சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்த முதியவர் விஸ்வநாதன் இவருக்கு வயது 82. இவர் மத்திய அரசின் பணியில் பணிபுரிந்து ஒய்வு பெற்றுள்ளார். விஸ்வநாதனின் மனைவி 15 ஆண்டுகளுக்கு முன்பதாகவே உயிரிழந்துள்ளார். இவருக்கு 44 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மகன் உள்ளார். விஸ்வநாதன் தனக்கு வரும் ஓய்வூதிய பணத்தை வைத்து, தனது மகனை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் விஸ்வநாதனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. இந்த நிலையில், தனது காலத்திற்கு பிறகு தனது மகனை யார் கவனிப்பார் என்ற யோசனை அவரை மிகவும் பாதித்தது. இதனால் தனது மகனையும் கொலை செய்து, தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார்.
இவரது முடிவின் விளைவாக, தனது மகனுக்கு உணவில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்துள்ளார். அவரும் தூக்க மாத்திரையை உட்கொண்டுள்ளார். இதில் விஸ்வநாதன் மகன் உயிரிழந்துவிட்டார். விஸ்வநாதன் மயக்க நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு அவரது வீட்டிலிருந்து, வீசிய வாடையை வைத்து, பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டை தட்டியுள்ளனர். யாரும் வெளியே வராததால், போலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து வீட்டின் கதவை உடைத்து பார்த்த போலீசார், விஸ்வநாதன் மயக்க நிலையில் இருப்பதையும், அவரது மகன் உயிரிழந்திருப்பதையும் கண்டறிந்துள்ளனர். தற்போது விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார். இவ்வாறு, தந்தையே தனது மகனை கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்