உயிரோடு இருந்த அண்ணனின் உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்த தம்பி.
சேலம் மாநகராட்சி கந்தம்பட்டி அருகே வசித்து வருபவர் சரவணன்(70). இவர் அவரது அண்ணனான பாலசுப்பரமணிய குமார் என்பவர் இறந்துவிட்டதாகக் கூறி, இறந்தவர்களின் உடலை வைக்கும் குளிர்சாதன பெட்டியில் வைப்பதற்காக, உடலை வைத்திடும் குளிர்சாதனப்பெட்டி பணியாளர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து, பாலசுப்பிராமணிய குமாரின் உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்த பின் உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, குளிர்சாதன பெட்டி உரிமையாளர்கள், பெட்டியை எடுக்க வந்துள்ளனர். அங்கு வந்த பணியாளர்கள், பெட்டிக்குள் முதியவர் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து சரவணனிடம் கூறிய போது, அவர் விரைவில் உயிரிழந்து விடுவார் எனக்கூறி வாக்குவாதத்ததில் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூரமங்கலம் போலீசார், குளிர்சாதன பெட்டிக்குள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முதியவரை மீட்டு, 108 ஆம்புலன்சு மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரோடு இருந்த முதியவரை பெட்டிக்குள் அடைத்து வைத்த மனிதநேயமற்ற செயல் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…