மணமேடையில் தாலிகட்டும் போதே மணமகன் மற்றும் பூசாரியின் கன்னத்தில் அறைந்த மணமகள்!
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சியை சேர்ந்தவர் விஜி. கூலி தொழிலாளியான இவருக்கும், ராசிபுரம் தாலுகா ஆயில்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், திருமணம் நடத்துவதற்கு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதன்படி இவர்கள் இருவருக்கும், உறவினர்கள் முன்னிலையில் சோமேஸ்வரர் கோவிலில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போது, கெட்டி மேளம் முழங்க, உறவினர்கள் பூ தூவ, மணமகன் மணமகளின் கழுத்தில் தாலி காட்டினார். தாலிய கட்டிய பின், மணமகன் மணமகளின் நெற்றியில் போட்டு வைத்தார். அப்போது மணமகள் எதிர்பாராத விதமாக, மணமகனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
மணமகளின் இந்த செயல் அங்கு சுற்றி இருந்தவர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதனையடுத்து, மணமகளிடம், அர்ச்சகர் எதற்காக இப்படி செய்கிறீர்கள் என விசாரித்துள்ளார். மேலும்,ஆத்திரமடைந்த மணமகள், அர்ச்சகரையும் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இந்த பிரச்சனைக்கு இடையே மணமகள், மணமகன் கட்டிய தாலியையும் தூக்கி எரிந்து விட்டு அந்த இடத்தை விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து, அதிர்ச்சியில் உறைந்த இருவீட்டாரையும், கோவிலைவிட்டு புறப்பட சொல்லிவிட்டு, அர்ச்சகரும் கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், இருவீட்டாரும் போலீசாரை அணுகிய போது, போலீசார் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையில், அந்த பெண்ணுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திருமணத்தில் அவருக்கு இஷ்டம் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. பின் இருவீட்டாரும் கவலையுடன் காவல் நிலையத்தை விட்டு சென்றனர்.
பின் விஜிக்கு உறவுக்கார பெண் பெண் ஒருவரை திருமணம் செய்து வைத்தனர். விஜிக்கு திருமணம் நடைபெற்றதால், மணமகன் வீட்டார் மகிழ்ச்சி அடைந்தனர்.