மழை வெள்ளத்தை ஆய்வு செய்த போது முதல்வரின் காலில் விழுந்து ஆசி பெற்ற மணமக்கள்…!
சென்னையில் ஆய்வின் போது, புதுமண தம்பதியினர் மகாலட்சுமி – கௌரி சங்கர் ஆகியோர் முதல்வரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
சென்னை : தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. குறிப்பாக சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று, தென் சென்னை மற்றும் வடசென்னை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இன்றும் சென்னையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆய்வின் போது, புதுமண தம்பதியினர் மகாலட்சுமி – கௌரி சங்கர் ஆகியோர் முதல்வரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
‘மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், இன்று (08-11-2021) சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டிருந்த போது, புதுமண தம்பதியினர் மகாலட்சுமி – கௌரி சங்கர் ஆகியோர் முதலமைச்சரிடம் வாழ்த்துப் பெற்றனர்’#CMMKStalin #DMK pic.twitter.com/1LfRygPAm7
— DMK (@arivalayam) November 8, 2021