மணமகன், மணமகளின் ஊரிலும் திருமணத்தை பதியலாம் – மசோதா தாக்கல்.!
திருமணம் பதிவு செய்தல் சட்டத் திருத்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இன்று இறுதி நாளான சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது பல்வேறு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது, திருமணம் பதிவு செய்தல் சட்டத் திருத்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
மணமகன் அல்லது மணமகளின் சொந்த ஊரில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்யலாம் என்றும் திருமணம் நடக்கும் இடத்தில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் தான் பதிவு செய்ய முடியும் என்பதில் மாற்றம் இல்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து, 3 நாள் நிறைவடைந்ததை அடுத்து, பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.