“மனதில் பட்டதை தைரியமாகச் சொல்லும் துணிவு கொண்டவர்” – முன்னாள் எம்.பி பொன்.ராதாகிருஷ்ணன்..!
முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி அவர்களின் மறைவிற்கு முன்னாள் எம்.பி பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.அவருக்கு வயது 87.இதனையடுத்து,அவரது உடல் சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இல்லத்தில் கட்சியினர், பொதுமக்கள் மரியாதை செலுத்திட வைக்கப்பட்டு உள்ளது.
மறைந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி அவரது குடும்பத்தினருக்கு காங்கிரஸ் மற்றும் பிற கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில்,கன்னியாக்குமரி முன்னாள் எம்.பி பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், மனதில் பட்டதை தைரியமாகச் சொல்லும் துணிவு கொண்டவரும், தேசியவாதியுமான அண்ணன் திண்டிவனம் இராமமூர்த்தி அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிகுந்த வேதனையும், வருத்தமும் அடைந்தேன்”,என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், மனதில் பட்டதை தைரியமாகச் சொல்லும் துணிவு கொண்டவரும், தேசியவாதியுமான அண்ணன் திண்டிவனம் இராமமூர்த்தி அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிகுந்த வேதனையும், வருத்தமும் அடைந்தேன். pic.twitter.com/gcbTdfypig
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) August 8, 2021