கொடிக்கம்பம் நட சென்ற சிறுவன் பலி…! கமலஹாசன் ட்வீட்…!
கொடிக்கம்பங்கள் நடும் பணிக்குச் சென்ற 13 வயது சிறுவன் பலியான சம்பவம் நெஞ்சை அதிர வைக்கிறது.
விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றும் பொன் குமார் என்பவரது திருமண விழா நடைபெற்றது . இந்த திருமண விழாவில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார். அவரை வரவேற்க திமுக சார்பில் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் இருந்து திமுக கட்சி கொடிகள், அலங்கார தோரணங்கள் நடவு செய்யும் பணிகளில் 10க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இந்த பணியில் ஈடுபட்டிருந்த விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சியை எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவன் கொடி கம்பம் நடும் பணியில் ஈடுபட்டார். அங்கு, நெடுஞ்சாலை மின் பகிர்மான கழகம் செயல்பட்டு வருவதால் அப்பகுதியில், அதிகளவிலான உயர் மின்னழுத்த கம்பிகள் செல்கின்றனர். அப்போது சிறுவன் நடவு செய்த கொடிக்கம்பம் மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி சிறுவன் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள், ‘கொடிக்கம்பங்கள் நடும் பணிக்குச் சென்ற 13 வயது சிறுவன் பலியான சம்பவம் நெஞ்சை அதிர வைக்கிறது. கொடிக்கம்பங்களும், பேனர்களும், அலங்கார வளைவுகளும் தொடர்ந்து உயிர்களைக் காவுவாங்குகின்றன. இந்தக் கீழ்மையில் இருந்து அனைத்துக் கட்சிகளுமே விடுபட வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
கொடிக்கம்பங்கள் நடும் பணிக்குச் சென்ற 13 வயது சிறுவன் பலியான சம்பவம் நெஞ்சை அதிர வைக்கிறது. கொடிக்கம்பங்களும், பேனர்களும், அலங்கார வளைவுகளும் தொடர்ந்து உயிர்களைக் காவுவாங்குகின்றன. இந்தக் கீழ்மையில் இருந்து அனைத்துக் கட்சிகளுமே விடுபட வேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) August 23, 2021