நாட்டு வெடியை கடித்த சிறுவன்… தலை சிதறி பலி..!

திருச்சி மாவட்டத்தில் நாட்டு வெடியை தின்பண்டம் என்று கடித்த சிறுவன் தலை சிதறி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ளஅலகரை கிராமத்தை சேர்ந்தவர் கங்கதரன் தமிழரசன் மற்றும் மோகன்ராஜ் உறவினர்களான இவர்கள் நேற்று முன்தினம் பாப்பாபட்டி பகுதியில் உள்ள ஒரு கிரசரில் மூன்று நாட்டு வெடிகுன்டு விலைக்கு வாங்கிவந்து மணமேடு பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் வீசி மீன் பிடித்து உள்ளனர் இந்த நிலையில் இதில் மீன்பிடித்து விட்டு அலங்கரையில் உள்ள சகோதரர் பூபதி வீட்டிற்கு மீன்களை கொண்டு வந்துள்ளனர் . அப்பொழுது மீதம் எந்த ஒரு நாட்டு வெடியை கட்டிலில் வைத்துவிட்டு கொல்லைப் புறத்தில் மீன்களை சமைப்பதற்காக சுத்தம் செய்துள்ளனர்.
மேலும் அப்போது அங்கு வந்த பூபதி மகன் சிறுவன் விஷ்ணுதேவ் கட்டிலில் இருந்த நாட்டு வெடியை தின்பண்டம் என்ற என்று எண்ணி நினைத்துக் கடித்துள்ளார், அப்போது நாட்டு வெடி பலத்த சத்தத்துடன் வெடித்தது விஷ்ணுதேவ் தலை சிதறி அங்கேயே இறந்தான். மேலும் போலீசாருக்கு தெரிவிக்கமால் அங்கிருந்த சுடுகாட்டில் சிறுவனின் உடலை எரித்துள்ளதாக தகவல்.
இந்த நிலையில் இதுகுறித்து தொட்டியம் போலீசார் வழக்கு பதிந்து கங்கதரன் மோகன் ராஜ் செல்வகுமாரை கைது செய்துள்ளனர்.