புறாவை துரத்தி சென்றதால் 100 அடி கிணற்றில் விழுந்த சிறுவன்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள புதுப்பாளையத்தில் வசித்து வருபவர் கூலி தொழிலாளியான பெருமாள். இவருக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். அவர் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்நிலையில், கார்த்திக் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அவ்வழியாக பறந்து சென்ற புறாவை துரத்தி சென்றுள்ளார். புறா மீது மட்டுமே தனது கவனத்தை செலுத்திய வாறு துரத்தி சென்ற கார்த்தி, கிணறு இருந்ததாகி கவனிக்காமல், 100 அடி ஆழ கிணற்றில் விழுந்துள்ளார்.
இதனையடுத்து, அவனுடன் இருந்த மற்ற நண்பர்கள், கார்த்தியின் வீட்டிற்கும், காவல் துறையினருக்கும் தகவலளித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் மாணவனை உயிருடன் காப்பாற்றினார். இந்நிலையில், ராசிபுரம் போலீசார், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகினறனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025