ஹெச்.ஐ.வி இரத்தம் கொடுத்த வாலிபரின் சடலம் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது….!!!
ஹெச்.ஐ.வி இரத்தத்தை தானம் செய்த வாலிபர் விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் வாலிபரின் சாவில் மர்மம் உள்ளதாகவும், பிற மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியை சேர்ந்த மருத்துவர்களை கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டது.
பிரேத பரிசோதனை :
இதையடுத்து நெல்லை, தேனி மற்றும் சிவகங்கை அரசு மருத்துவமனையின் ஏதாவது ஒரு மருத்துவமனையின் 2 தடவியல் நிபுணர்களை கொண்டு பரிசோதனை செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து தேனி மருத்துவக்கல்லூரியை சேர்ந்த தடவியல் நிபுணர்களை கொண்டு மதுரை அரசு மருத்துவமனையில் வாலிபரின் உடல் இன்று பரிசோதனை செய்யப்படுகிறது.