பெரியநெசலூர் மயானத்தில் மாணவியின் உடல் நல்லடக்கம்!
பெரியநெசலூர் மயானத்தில் மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடந்த 13-ஆம் தேதி தனியார் பள்ளியில் உயிரிழந்த நிலையில், 11 நாட்களுக்கு பின் கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. சொந்த ஊருக்கு மாணவின் உடல் கொண்டு செல்லப்பட்டு, கடலூர் பெரியநெசலூர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலுக்கு உள்ளூர் மக்கள், உறவினர்கள் மற்றும் அமைச்சர் என பலரும் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். மாணவியின் இறுதிச் சடங்கு நடைபெறும் வேப்பூர் பெரியநெசலூர் கிராமம், போலீஸார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, பெரியநெசலூரில் மாணவியின் இறுதி ஊர்வலம் கிராம மக்களின் கண்ணீருடன் தொடங்கி நடைபெற்றது. வெளியூர் ஆட்கள் அனுமதிக்கப்படாத நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இறுதி ஊர்வலம் நடந்தது. இறுதி ஊர்வலத்தில் மாணவியின் உறவினர்கள், உள்ளூர் மக்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. மாணவியின் இறுதி ஊர்வலம் தொடங்கிய நிலையில், இன்னும் சற்று நேரத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பெரியநெசலூர் மயானத்தில் மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மயானத்தில் சடங்குகளை மேற்கொண்டு 11-ஆம் வகுப்பு புத்தகத்துடன் மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அசபாவிதங்களை தடுக்க அப்பகுதியில் காவல்துறை குவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பிரேத பரிசோதனை செய்யப்பட்டு 11 நாட்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.