ஜம்முவில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் நாளை மதுரை கொண்டுவரப்படுகிறது.!

Published by
மணிகண்டன்

ஜம்முவில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் நாளை மதுரை புதுப்பட்டிக்கு கொண்டுவரப்பட உள்ளது. 

ஜம்மு காஷ்மீர், ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரர் ஆவர்.24 வயதான  இவர்  மதுரை மாவட்டம் T.புதுப்பட்டியை சேர்ந்தவர். இவருக்கு பலரும்  தங்கள் வீரவணக்கத்தை, இரங்கல் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ராணுவ வீரரின் மறைவுக்கு இரங்களும், ராணுவ வீரரின் வீட்டிற்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவியும் அறிவித்தார்.

இந்நிலையில், ஜம்முவில் உயிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் நாளை அவரது சொந்த ஊரான மதுரை புதுப்பட்டிக்கு கொண்டுவரப்பட உள்ளது என தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Recent Posts

தமிழ்நாட்டில்  22 மாவட்டங்களில் மிதமான மழை.! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

தமிழ்நாட்டில்  22 மாவட்டங்களில் மிதமான மழை.! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை…

1 hour ago

விறுவிறு வாக்குப்பதிவு : வயநாடு இடைத்தேர்தல், ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் தொடக்கம்.!

டெல்லி : ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 15…

2 hours ago

தொடர் கனமழை : பெரம்பலூர், அரியலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த…

2 hours ago

கனமழை எதிரொலி : இந்தந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…

3 hours ago

சீனாவில் பரபரப்பு! கூட்டத்தில் காரை ஏற்றி 35 பேரை கொலை செய்த நபர்!

சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…

13 hours ago

“காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைய வாய்ப்பில்லை”…வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தகவல்!

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…

13 hours ago