கடலூரில், மாற்றி கொடுக்கபட்ட கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலம்.
கடலூர் மாவட்டம், புவனகிரியை சேர்ந்தவர் ஜாஹீர் உசேன். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று 8:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.
அதுபோல பண்ருட்டி, புதுப்பேட்டையை சேர்ந்த ஆறுமுகம் என்பவரும், கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், பரிசோதனை முடிவுகள் வராமல் இருந்தது. இதனையடுத்து, இவர் நேற்று இரவு 10 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடலும் பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இவர்களது உறவினர்கள், உடலை வந்தபோது, உடலை மாற்றி கொடுத்ததாக கூறப்படுகிறது. ஜாகிர் உசேன் உடலுக்கு பதில் ஆறுமுகம் உடலையும், ஆறுமுகம் உடலுக்கு பதில் ஜாஹிர் உசேன் உடலை மாற்றி கொடுத்துள்ளனர். இந்நிலையில், ஆறுமுகத்திற்கு, தொற்று இல்லை என பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில், அவரது உறவினர்கள், ஆறுமுகத்தின் உடலை பிரித்து பார்த்துள்ளனர்.
அப்போது தான் உடல் மாற்றப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. அப்போது அரசு மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்ட போது,சடலம் மாற்றி கொடுக்கப்பட்டதாக அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள்,ஜாஹிர் உசேன் உறவினர்களை சந்தித்து, முறையிட்டனர்.
அப்போது அவர்கள், ஆறுமுகம் உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டதாகவும், ஜாஹிர் உசேன் உடலை எடுத்து வாருங்கள், பின் அவரது உடலை ஜாஹிர் உசேன் உறவினர்களிடம் கொடுத்துள்ளனர். பின் கடலூர் தாசில்தார் முன்னிலையில், ஆறுமுகம் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, அவரது உறவினர்களிடம் கொடுக்கப்பட்டது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…