கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலம் மாற்றி கொடுக்கப்பட்டதால், மீண்டும் புதைக்கப்பட்ட சடலம் தோண்டியெடுப்பு….!

Default Image

கடலூரில், மாற்றி கொடுக்கபட்ட கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலம். 

கடலூர் மாவட்டம், புவனகிரியை சேர்ந்தவர் ஜாஹீர் உசேன். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடலூர்  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்தார். இந்நிலையில், நேற்று 8:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். அவரது உடலை அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.

அதுபோல பண்ருட்டி, புதுப்பேட்டையை சேர்ந்த ஆறுமுகம் என்பவரும், கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், பரிசோதனை முடிவுகள் வராமல் இருந்தது. இதனையடுத்து, இவர் நேற்று இரவு 10 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடலும் பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இவர்களது  உறவினர்கள், உடலை வந்தபோது, உடலை மாற்றி கொடுத்ததாக கூறப்படுகிறது. ஜாகிர் உசேன் உடலுக்கு பதில் ஆறுமுகம் உடலையும், ஆறுமுகம் உடலுக்கு பதில் ஜாஹிர் உசேன் உடலை மாற்றி  கொடுத்துள்ளனர். இந்நிலையில், ஆறுமுகத்திற்கு, தொற்று இல்லை என பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில், அவரது உறவினர்கள், ஆறுமுகத்தின் உடலை பிரித்து பார்த்துள்ளனர்.

அப்போது தான் உடல் மாற்றப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. அப்போது அரசு மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்ட போது,சடலம் மாற்றி கொடுக்கப்பட்டதாக அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த  அவர்கள்,ஜாஹிர் உசேன் உறவினர்களை சந்தித்து, முறையிட்டனர்.

அப்போது அவர்கள், ஆறுமுகம் உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டதாகவும், ஜாஹிர் உசேன் உடலை எடுத்து வாருங்கள்,  பின் அவரது உடலை ஜாஹிர் உசேன் உறவினர்களிடம் கொடுத்துள்ளனர். பின் கடலூர் தாசில்தார் முன்னிலையில், ஆறுமுகம் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, அவரது உறவினர்களிடம் கொடுக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்