டிரம்மில் இருந்து கண்டெடுக்கப்பட்ட “டிரான்ஸ் கிச்சன்” ஓட்டல் உரிமையாளரின் சடலம்.!
கோவை, சாய்பாபா காலனியில் வசித்து வரும் திருநங்கை சங்கீதா, திருநங்கைகளுக்காக பல நலத்திட்ட பணிகளை செய்து வந்ததுடன் ‘டிரான்ஸ் கிச்சன்’ என்ற ஓட்டலை தொடங்கி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார்.
இவர் தற்போது, மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது, உடல் பல வெட்டு காயங்களுடன் வீட்டில் உள்ள தண்ணீர் அடைத்து வைக்கும் டிரம்மில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.