பெரிய இடத்து திருமணம்.. போக்ஸோ சட்டம்.. கரை ஒதுங்கிய உடல்.! தற்கொலை செய்துகொண்ட நிஷாந்த்.!
தனியார் மருத்துவமனை சிஇஓ பெண்ணை திருமணம் செய்ய இருந்து போக்ஸோ வழக்கில் சிக்கி தற்கொலை செய்து கொண்ட நிஷாந்தின் உடல் போரூர் ஏரியில் கரை ஒதுங்கியது.
சென்னை வடபழனி பகுதியை சேர்ந்த நிஷாந்த் எனும் இளைஞர், சென்னை தனியார் மருத்துவமனை தலைமை அதிகாரி மகளை திருமணம் செய்வதாக இருந்தது. அப்போது தான் நிஷாந்த் மீது பாய்ந்தது போக்ஸோ வழக்கு. இதனால் அவர் தேடப்படும் நபராக மாறிப்போனார்.
பள்ளிப்பருவ காதல் :
இந்த போக்ஸோ சம்பவமானது நிஷாந்த் படிக்கும் காலத்தில் நடந்துள்ளது. அதாவது, நிஷாந்த், பள்ளியில் படிக்கும் போதே ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அப்போது பல முறை அந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசமாக இருந்துள்ளார் என தெரிகிறது.
போக்ஸோ வழக்கு :
கல்லூரி முடித்து பல முறை திருமணம் செய்ய அந்த பெண் கூறியும் நிஷாந்த் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து நிஷாந்த் மீது, பாதிக்கப்பட்ட அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணைக்காக நிஷாந்த்தை தேடி வந்துள்ளனர் காவல்துறையினர்.
நிஷாந்த் தலைமறைவு :
இந்த விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவரவே திருமணம் நின்றுவிட்டது. பிறகு தலைமறைவாகி இருந்த நிஷாந்த் தனது நண்பர்க்ளுடன் இருந்துள்ளார். பின்னர் நேற்று முன்தினம், இரவு அங்கிருந்து புறப்பட்டு, நான் வாழ தகுதியற்றவன் என்பது போல தகவல் அனுப்பியுள்ளார்.
நிஷாந்த் தற்கொலை :
இதனால் பதறிப்போன நண்பர்கள் காவல்நிலையத்தில் கூறியுள்ளனர். பின்னர் நிஷாந்தின் போன் போரூர் ஏரி அருகே அணைத்துவைக்கப்பட்டது தெரிந்தது. மேலும், அவரது காரும் ஏரிக்கு அருகே இருந்துள்ளது. இதனை அடுத்து, ஏரியில் தற்கொலை செய்து கொண்டாரா என தீயணைப்பு துறையினர் தேடி வந்தனர்.
தற்போது நிஷாந்தின் உடல் போரூர் ஏரியில் கரை ஒதுக்கியுள்ளது. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பும் முனைப்பில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.