இந்த நெருக்கடியான சூழலில் அடிக்கடி மனம் திறந்து பேசுகிற பிரதமர் மோடியைப் பார்க்க முடியவில்லை என கே.எஸ் அழகிரி விமர்சனம்.
தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பறவை வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த சமயத்தில் ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ சார்ந்த உபகாரணங்களுக்கு பல இடங்களில் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதனால் டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவில் உயிரிழப்பு சற்று அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா பரவலை மத்திய அரசு சரியாக கையாளவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் குற்றசாட்டி வருகின்றனர். அந்தவகையில் தமிழகம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், நேற்று நிலவரப்படி, 3 லட்சத்து 80 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 4 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் உடலை மயானங்களில் எரிக்க முடியவில்லை, எங்கு பார்த்தாலும் பிணக்குவியல்கள். கடந்த 15 மாதங்களில் தொடக்கத்தில் கொரோனாவின் முதல் அலையை எதிர்கொண்டோம். அப்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டார்கள்.
ஆனால், இரண்டாவது அலையின் போது, குடும்பத்தைக் காப்பாற்றக்கூடிய இளைஞர்கள் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்து வருகிறார்கள். மருத்துவமனைகளில் படுக்கை, ஆக்சிஜன் தட்டுப்பாடு, உயிர் காக்கும் மருந்துகள் பற்றாக்குறை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இத்தகைய கோர நிலையில், அடிக்கடி மனம் திறந்து பேசுகிற பிரதமர் மோடியைப் பார்க்க முடியவில்லை.
மத்திய அரசு செயல்படுகிறதா என்கிற கேள்விக்குறி எழுந்துள்ளது. நகர்ப்புறங்களில் பரவிய கொரோனா தொற்றின் தாக்கம் கிராமப் புறங்களிலும் அதிகரித்துள்ளது. உத்தரபிரதேசத்திலிருந்து பீகார் வரை கங்கையில் பிணங்கள் மிதக்கின்றன. 3வது அலை சிறார்களைப் பாதிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த செய்தியைக் கேட்கிற போது, நெஞ்சம் பதைபதைக்கிறது என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் வழங்குவதில் மத்திய அரசு தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருகிறது. 29 மாநிலங்களும் 2 தனியார் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்யும்போது, போட்டியை அதிகப்படுத்தி வணிகமயமாக்கி லாபம் பார்க்க நினைக்கின்றனர்.
மாநிலங்கள் நேரடியாகத் தடுப்பூசிகளை வாங்கச் சொல்லிய மத்திய அரசு, அதற்கான செயல்முறையை வகுக்கவில்லை. நாடு முழுவதும் தடுப்பூசி கொள்கை தவறாக வழிநடத்தப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…