குவைத் தீ விபத்து: தமிழகத்தை சேர்ந்தவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு!

Kuwait

குவைத்: குவைத் நாட்டில் இருக்கும் மங்காப் பகுதியில் அமைந்துள்ள ஒரு அடுக்கு மாடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்தில் 45 இந்தியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 50 பேர் மருத்துவமனையில்,  தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் 45 பேர் இந்தியர்கள் எனவும்,  கேரளாவை சேர்ந்தவர்கள் 24 பேர்களும், தமிழகத்தை சேர்ந்த 7 பேர், எஞ்சியவர்கள் ஆந்திரா, பிஹார் போன்ற மாநிலங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து, தீ விபத்தில் பலியான 45 இந்தியர்களின் உடல்களை  போர் விமானம் மூலம் கொச்சிக்கு இன்று காலை 10.30 மணிக்கு  கொண்டு வரப்பட்டது.

கொச்சி விமான நிலையத்தில் அவர்களுடைய உடலுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மேலும் பலர் விமான நிலையத்திற்கு சென்று தங்களுடைய அஞ்சலியை செலுத்தினர். தமிழகத்தின் சார்பில் கொச்சி விமான நிலையத்திற்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் சென்று இருக்கிறார்.

அஞ்சலி செலுத்திய நிலையில், உடல்கள் அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இருந்து 8 ஆம்புலன்ஸ்கள் காலையில் கொச்சி விமான நிலையத்தில் தயாராக  இருந்த நிலையில், 7 ஆம்புலன்ஸ்களில் தமிழகத்தை சேர்ந்த 7 பேரின் உடல்கள்  தனித்தனியாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும், இந்த தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் குறித்த விவரங்களும் வெளியாகி இருக்கிறது. ராம கருப்பண்ணன்- ராமநாதபுரம், வீராசாமி- தூத்துக்குடி, சின்னத்துரை – கடலூர், முகம்மது ஷரீப்- விழுப்புரம், ரிச்சர்டு- தஞ்சாவூர், எபமேசன்- திருச்சி, கோவிந்தன்- சென்னை என தெரிய வந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்