#BREAKING: சூலூரிருந்து 13 பேரின் உடல்கள் டெல்லிக்கு புறப்பட்டது..!

Published by
murugan

சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து 13 பேரின் உடல்களும் விமானப்படை விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டது.

நேற்று நீலகிரி குன்னூரில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம் செய்தனர். ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிர் உயிரிழந்ததை இந்திய விமானப்படை உறுதி செய்தது.

இதைத்தொடர்ந்து, வெலிங்டனில் முப்படை தளபதி பிபின் ராவத்  உட்பட 13பேரின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு, காவல்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். பின்னர்,  13 பேரின் உடல்களும் 13 ஆம்புலன்ஸ்களில் சூலூர் விமானப்படை தளத்திற்கு சாலை மார்க்கமாக கொண்டு வரபப்பட்டது.

சூலுார் விமானப்படை தளத்திலும் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டு பின்பு சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து தனி விமானம் மூலம் 13 பேரின் உடல்களும் டெல்லிக்கு கொண்டுச்செல்லப்பட்டது. 13 பேரின் உடல்கள் இன்று மாலை டெல்லி சென்றடையும் என கூறப்படுகிறது.

சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து 2 சிறப்பு விமானங்கள் டெல்லி செல்கிறது. ஒரு விமானத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்களும்,  மற்றோரு விமானத்தில் நேற்று விபத்து நடந்ததிலிருந்து டெல்லியிலிருந்து முப்படையின் உயரதிகாரிகளும் குன்னூர் வந்ததனர். அவர்களும் திரும்பி டெல்லிக்கு செல்வதற்கு ஏதுவாக மற்றோரு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Recent Posts

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…

2 hours ago

பட்டையை கிளப்புமா ரெட்ரோ! முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்யுமா?

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…

3 hours ago

சுற்றி சுற்றி அடித்த சுட்டி குழந்தை! பஞ்சாப் அணிக்கு சென்னை வைத்த டார்கெட்!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

4 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

5 hours ago

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

6 hours ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

7 hours ago