#BREAKING: சூலூரிருந்து 13 பேரின் உடல்கள் டெல்லிக்கு புறப்பட்டது..!

சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து 13 பேரின் உடல்களும் விமானப்படை விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டது.
நேற்று நீலகிரி குன்னூரில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம் செய்தனர். ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிர் உயிரிழந்ததை இந்திய விமானப்படை உறுதி செய்தது.
இதைத்தொடர்ந்து, வெலிங்டனில் முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13பேரின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு, காவல்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், 13 பேரின் உடல்களும் 13 ஆம்புலன்ஸ்களில் சூலூர் விமானப்படை தளத்திற்கு சாலை மார்க்கமாக கொண்டு வரபப்பட்டது.
சூலுார் விமானப்படை தளத்திலும் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டு பின்பு சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து தனி விமானம் மூலம் 13 பேரின் உடல்களும் டெல்லிக்கு கொண்டுச்செல்லப்பட்டது. 13 பேரின் உடல்கள் இன்று மாலை டெல்லி சென்றடையும் என கூறப்படுகிறது.
சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து 2 சிறப்பு விமானங்கள் டெல்லி செல்கிறது. ஒரு விமானத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்களும், மற்றோரு விமானத்தில் நேற்று விபத்து நடந்ததிலிருந்து டெல்லியிலிருந்து முப்படையின் உயரதிகாரிகளும் குன்னூர் வந்ததனர். அவர்களும் திரும்பி டெல்லிக்கு செல்வதற்கு ஏதுவாக மற்றோரு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025