பாஜக யாருடன் கூட்டணி சேர விரும்புகிறது என்பதை பொன்.ராதாகிருஷ்ணன் தான் கூற வேண்டும்-தம்பிதுரை
பாஜக யாருடன் கூட்டணி சேர விரும்புகிறது என்பதை பொன்.ராதாகிருஷ்ணன் தான் கூற வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில், மத்திய பட்ஜெட்டில் தமிழகம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது, இந்த பட்ஜெட்டை பாஜகவின் தேர்தல் வாக்குறுதி என்றுதான் கூறமுடியும் .கருத்து கணிப்பை அதிமுக நம்புவதில்லை. மக்களின் கணிப்பைதான் நம்புகிறது.
பாஜக யாருடன் கூட்டணி சேர விரும்புகிறது என்பதை பொன்.ராதாகிருஷ்ணன் தான் கூற வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.