தமிழ்நாட்டில் உள்ள பூத் எண்ணிக்கை கூட பாஜக மாநில தலைவருக்குத் தெரியாது! – அமைச்சர் செந்தில் பாலாஜி
சமூக ஊடகத்தில் ‘படம்’ ஓட்டி விளம்பரம் செய்து கொண்டிருப்பவருக்கு தேர்தலில் தமிழ்நாடு பாடம் கற்பிக்கும் என அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட்.
அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய அண்ணாமலை அவர்கள், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், திமுக-வுக்கு பாஜக தான் முதல் எதிரி என்று முதல்வரே கூறியுள்ளார். திமுகவினர் முதல்வரை தூங்க விடுங்கள். பாஜக வளரும் போது முதல்வருக்கு இன்னும் தூக்கம் கெட்டு விடும் என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘தமிழ்நாட்டில் உள்ள பூத் எண்ணிக்கை கூட பாஜக மாநில தலைவருக்குத் தெரியாது! 68,019 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில் 66,000தான் உள்ளன என்பார். களமும் தெரியாது; தரவும் தெரியாது. சமூக ஊடகத்தில் ‘படம்’ ஓட்டி விளம்பரம் செய்து கொண்டிருப்பவருக்கு தேர்தலில் தமிழ்நாடு பாடம் கற்பிக்கும்!’ என விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள பூத் எண்ணிக்கை கூட பாஜக மாநில தலைவருக்குத் தெரியாது!
68,019 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில் 66,000தான் உள்ளன என்பார்.
களமும் தெரியாது; தரவும் தெரியாது.
சமூக ஊடகத்தில் ‘படம்’ ஓட்டி விளம்பரம் செய்து கொண்டிருப்பவருக்கு தேர்தலில் தமிழ்நாடு பாடம் கற்பிக்கும்!
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) October 13, 2022