பாஜக உள்ளாட்சித் தேர்தலில் தனித்தே போட்டியிட்டிருக்கலாம்-பொன்.ராதாகிருஷ்ணன்
- தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
- பாஜக தனித்து போட்டியிட்டு இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி முதல் கட்டமாக கடந்த 27-ஆம் தேதியும் இரண்டாம் கட்டமாக கடந்த 30-ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்றது.இதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக கனிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவியில் 6 இடங்களிலும் , ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியில் 87 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.
இந்நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும்,பாஜகவின் மூத்தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், பாஜகவின் காலம் தமிழகத்தில் தொடங்கி விட்டது.உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், தமிழகத்தில் பாஜகவிற்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளதை காட்டுகிறது. கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லை என்றாலும் நாங்கள் பல இடங்களில் வெற்றி பெற்றிருப்போம்.உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்தார்.