சென்னை,மதுரை,கோவை,ஒசூர் உள்ளிட்ட 14 மாநகராட்சிகளில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இடப்பங்கீட்டில் அதிமுக,பாஜக இடையே இடப்பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர் இழுப்பறி நீடித்து வந்தது.ஒட்டு மொத்தமாக 25 சதவீத இடங்கள் வரை பாஜக எதிர்பார்த்ததாக கூறப்படுகிறது.
ஆனால்,பாஜகவுக்கு 4 அல்லது 5 சதவீத இடங்களை மட்டுமே அதிமுக ஒதுக்க முன்வந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.இதன்பின் அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டு வருவதால்,பாஜக தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இடப்பங்கீட்டில் அதிமுக – பாஜக இடையே உடன்பாடு ஏற்படாததால்,தமிழகத்தில் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுவதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இந்நிலையில்,சென்னை,மதுரை,கோவை,ஒசூர் உள்ளிட்ட 14 மாநகராட்சிகளில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. குறிப்பாக,சென்னையில் மட்டும் 112 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.
மேலும்,இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில்:
“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மாநகராட்சிக்கு 353 பேர்,நகராட்சிகளுக்கு 129 பேர், டவுன் பஞ்சாயத்துகளுக்கு 119 பேர் அடங்கிய முதல் பட்டியல் வெளியிடப்பட்டது.அவர்கள் நமது மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துச் செல்வதற்கான நமது தூதர்கள்.அவர்கள் அனைவரும் வெற்றிபெற வாழ்த்துக்கள்”,என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…
தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…
சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை…
தர்மபுரி : இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில்…