“இவர்கள் நமது தூதர்கள்…பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு”- அண்ணாமலை!
சென்னை,மதுரை,கோவை,ஒசூர் உள்ளிட்ட 14 மாநகராட்சிகளில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இடப்பங்கீட்டில் அதிமுக,பாஜக இடையே இடப்பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர் இழுப்பறி நீடித்து வந்தது.ஒட்டு மொத்தமாக 25 சதவீத இடங்கள் வரை பாஜக எதிர்பார்த்ததாக கூறப்படுகிறது.
ஆனால்,பாஜகவுக்கு 4 அல்லது 5 சதவீத இடங்களை மட்டுமே அதிமுக ஒதுக்க முன்வந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.இதன்பின் அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டு வருவதால்,பாஜக தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இடப்பங்கீட்டில் அதிமுக – பாஜக இடையே உடன்பாடு ஏற்படாததால்,தமிழகத்தில் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுவதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இந்நிலையில்,சென்னை,மதுரை,கோவை,ஒசூர் உள்ளிட்ட 14 மாநகராட்சிகளில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. குறிப்பாக,சென்னையில் மட்டும் 112 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.
2/5
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – 2022நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சிமன்ற தேர்தலுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
வேட்பாளர் பட்டியல்..
– நமது மாநில தலைவர் திரு.@annamalai_k#Vote4BJP pic.twitter.com/q3kJeC8Cz5
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) January 31, 2022
3/5
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – 2022நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சிமன்ற தேர்தலுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
வேட்பாளர் பட்டியல்..
– நமது மாநில தலைவர் திரு.@annamalai_k#Vote4BJP pic.twitter.com/iniNz8tMrc
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) January 31, 2022
மேலும்,இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில்:
“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மாநகராட்சிக்கு 353 பேர்,நகராட்சிகளுக்கு 129 பேர், டவுன் பஞ்சாயத்துகளுக்கு 119 பேர் அடங்கிய முதல் பட்டியல் வெளியிடப்பட்டது.அவர்கள் நமது மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துச் செல்வதற்கான நமது தூதர்கள்.அவர்கள் அனைவரும் வெற்றிபெற வாழ்த்துக்கள்”,என்று தெரிவித்துள்ளார்.
First list of 353 candidates for Corporations, 129 candidates for Municipalities & 119 candidates for Town Panchayats released by @BJP4TamilNadu.
They are our ambassadors for taking the vision of our Hon PM Shri @narendramodi avl across households!
Wishing all of them success! pic.twitter.com/4n5Wu06Jrt
— K.Annamalai (@annamalai_k) January 31, 2022