தமிழகத்தில் இன்னும் பாஜக காலூன்றவில்லை என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தான் கூட்டணி எனவும் பாஜகவை அனுசரித்து செல்லும் கட்சிகளுடன் சட்டமன்ற தேர்தலை சந்திப்போம் என கூறினார்.
மத்தியில் ஆட்சி இருப்பதால் பாஜக தலைமையில் தான் கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்கும் என தெரிவித்தார். அதிமுக VS திமுக என்று இருந்த நிலையில் தற்போது பாஜக VS திமுக என மாறிவிட்டது என்று வி.பி.துரைசாமி கூறினார்.இவரது கருத்து அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு திமுகவினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், திமுகவிற்கு ,பாஜகவிற்கும் போட்டி என்றால் கொள்கை அளவிலே திமுக பாஜகவிற்கு நேரெதிரான கொள்கை என்பதில் மாற்று கருத்து இல்லை.அவர்கள் மதவாதம் பேசுகிறார்கள்.நாங்கள் மத நல்லிணக்கம் பேசுகின்றோம்.எனவே கொள்கை ரீதியாக பாஜகவிற்கும், எங்களுக்கும் போட்டி. ஆனால் தேர்தல் கூட்டணி என்று வரும்போது அவர்கள் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கின்றனர். அதிமுக அவர்களுக்கு மக்களவை தேர்தலில் 5 இடங்களை கொடுத்தது.அந்த இடத்தில் தான் அவர்களும் இருக்கிறார்கள். பாஜகவை பொறுத்தவரை அவர்கள் இன்னும் தமிழகத்தில் காலூன்றவில்லை என்று தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…