கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வாரா கடன் பற்றிய விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் அறிந்து அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
வாரா கடன் என்பது மத்திய அரசு சார்பில் , பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையாகும். அது முறையான கால இடைவெளியில் வசூல் செய்யப்பட வேண்டும். இது குறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் பதிவிடுகையில் , எதற்கெடுத்தாலும் நேருவில் துவங்கி மன்மோகன் சிங் மீதே பழி போடும் நரேந்திர மோடி அரசின் முகமூடி கிழிந்துவிட்டது.
காங்கிரஸ் ஆட்சியமைத்தால் கடந்த முறை போல இந்த முறையும்… சத்தீஸ்கர் முதல்வர் வாக்குறுதி.!
மன்மோகன் சிங் பிரதமராக இருந்து, காங்கிரஸ் ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் இந்தியா அளித்துள்ள வராக்கடன் தொகை 17 மாதங்களில் மோடி ஆட்சியில் வசூல் செய்யப்படாமல் போனது. மன்மோகன் சிங் காலத்தில் ஆண்டு சராசரி வராக்கடன் 34,192 கோடியாக இருந்தது, பிரதமர் மோடி ஆட்சியில் ஆண்டுக்கு 2.77 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது .
மன்மோகன் சிங்கின் 10 ஆண்டு கால ஆட்சியில் மொத்த வராக்கடன் 3.76 லட்சம் கோடி ஆகும். ஆனால், மோடி ஆட்சியில் 9 ஆண்டுகளில் மொத்த வாராக்கடன் 24.95 லட்சம் கோடி ரூபாயாகும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வராக்கடன் என்றாலே நீண்ட வகுப்பு எடுப்பார். வராக்கடனை வசூல் செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறுவார்.
25 லட்சம் வராக்கடன் இருக்கும் வெறும் 10 சதவீதமான 2.5 லட்சம் கோடி தான் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வைத்துள்ள கடன் பாக்கியே அதிகம். அவர்களின் பெயர்களை வெளியிட கோரினால் , அது பரம ரகசியம் என ரிசர்வ் வங்கி கூறுகிறது.
இப்படி வசூல் செய்யப்படாமல் இருக்கிறது யார் பணம் .? இந்தியா முழுவதும் அரும் பாடுபட்டு, தமது பெரும் உழைப்பை செலுத்தும் சாதாரண நடுத்தர மக்கள் சேமித்து வைத்திருக்கிற பணம். மக்களுக்கு சொல். யார் யார் வராக்கடன் வைத்திருக்கிறார்கள். யார் யாருக்கு தள்ளுபடி செய்துள்ளீர்கள் என்று. இவை எல்லாம் பரம ரகசியம் என சட்டம் சொல்கிறது என்றால் சட்டத்தை திருத்துங்கள். அம்பானி அதானிகளுக்காக உங்கள் பேனா ஆயிரம் திருத்தம் செய்யுமென்றால் அப்பாவி மக்களின் சேமிப்புகளை பாதுகாக்க உங்கள் பேனா அசையாதா? என தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…