தமிழகத்தை தனியாக பிரிக்க வேண்டும் என்று பாஜக நினைக்கவில்லை என வானதி சீனிவாசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கோவை சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையிலுள்ள பாஜகவின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் அக்கட்சி சார்பாக ஆடிட்டர் ரமேஷின் எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டார்.
அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தை தனியாக பிரிக்க வேண்டும் என்று பாஜக நினைக்கவில்லை. கொங்குநாடு விவகாரத்தில் தனக்கு தனிப்பட்ட கருத்து எதுவும் கிடையாது . கட்சி பொறுப்பாளராக தான் கருத்தை தெரிவிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும், கொங்குப் பகுதி மக்களின் வளர்ச்சி, தேவைகள், அபிலாசைகள் என பல ஆண்டு ஏக்கமாக உள்ள விஷயங்களை மாநில அரசு எவ்வாறு நிறைவேற்றப் போகிறது என்பதைப் பொறுத்தே கொங்குநாடு விவகாரத்தில் அடுத்த கட்ட பரிசீலனை இருக்கும் என தெரிவித்துள்ளார்.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…