தங்க தமிழ்செல்வன் உட்பட யாரையும் பின்னால் இருந்து பாஜக இயக்கவில்லை – தமிழிசை

தங்க தமிழ்செல்வன் உட்பட யாரையும் பின்னால் இருந்து பாஜக இயக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், இன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஸ்டாலின் அன்று மீத்தேன் திட்ட பரிசோதனைக்கு ஏன் கையெழுத்திட்டார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் .ஆளும் கட்சியாக இருந்தால் ஒரு நிலைப்பாடு, எதிர்க்கட்சியாக இருந்தால் ஒரு நிலைப்பாடா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தங்க தமிழ்செல்வன் உட்பட யாரையும் பின்னால் இருந்து பாஜக இயக்கவில்லை என்றும் பாஜகவை பொருத்தவரை நேரடி அரசியலில் தான் இருக்கும், மறைமுக அரசியலில் ஈடுபடாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025