தமிழகத்தில் பாஜக கூட்டணி சக்திவாய்ந்த கூட்டணியாக அமையும்-முரளிதர ராவ்
தமிழகத்தில் பாஜக கூட்டணி சக்திவாய்ந்த கூட்டணியாக அமையும் என்று பா.ஜ.க பொதுச் செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பா.ஜ.க பொதுச் செயலாளர் முரளிதர ராவ் கூறுகையில்,பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பிப்ரவரி 22-ஆம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார். பிப்ரவரி 22-ஆம் தேதி மதுரை, ராமநாதபுரத்தில் அமித்ஷா தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். தமிழகத்தில் பாஜக கூட்டணி சக்திவாய்ந்த கூட்டணியாக அமையும்.
ஒட்டுமொத்த மக்களுக்கு புல்வாமா தாக்குதல் மிகப்பெரிய சவால் எல்லோரும் சேர்ந்து தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும். இச்சம்பவத்தை அரசியலாக்கக் கூடாது என்று பா.ஜ.க பொதுச் செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.