பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வரும் தேர்தலில் மக்களால் தண்டிக்கப்படுவார்கள் – டி.ராஜா
வரும் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், மக்களால் தண்டிக்கப்படுவார்கள்.
சிபிஐ கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் டி.ராஜா அவர்கள் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் வேளாண் சட்டத்தை எதிர்த்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளான் சட்டங்களை ரத்து செய்யாமல், பாஜக வெறும் பேச்சுவார்த்தை வருகிறது.
வரும் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், மக்களால் தண்டிக்கப்படுவார்கள் என்றும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முழு அதிகாரத்தை கொடுத்து அவர்கள் விருப்பப்படி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.