போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடைமையாக்கியதற்கான சட்ட மசோதா இன்று தாக்கல்

Default Image

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடைமையாக்கியதற்கான சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு முதலமைச்சர் பழனிசாமி, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லம் நினைவு இல்லமாக்கப்படும் என்று அறிவித்தார்.இதனை தொடர்ந்து, போயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்து. நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது.  ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை தமிழக அரசு விலைக்கு வாங்க ஏதுவாக சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு ரூ. 67,90,52,033 டெபாசிட் செய்தது.

இதனால்  நினைவு இல்லமாக மாற்ற அரசு இழப்பீட்டுத் தொகையை செலுத்தியது மூலம் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வீடு அரசுடைமையானது என்று தமிழக அரசு அறிவித்தது. உரியவர்கள் இழப்பீட்டுத் தொகையை சிட்டி சிவில் நீதிமன்றம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தது. நினைவு இல்லத்தில் ஒரு பகுதியை முதலமைச்சர் முகாம் அலுவலகமாக பயன்படுத்தலாம் என்ற நீதிமன்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றும் நினைவு இல்லத்தில் முகாம் அலுவலகம் அமைக்கப்பட மாட்டாது என்றும் தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடைமையாக்கியதற்கான சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது.இந்த மசோதாவையும் ,ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை உருவாக்குவதற்கான சட்ட மசோதாவையும் அமைச்சர் கடம்பூர் ராஜு தாக்கல் செய்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

rohit sharma and virat kohli
Rohit sharma - Virat kohli
Andhra Pradesh CM N Chandrababu naidu
senthil balaji edappadi palanisamy
Dragon Movie Budget
ADMK Chief secretary Edappadi Palanisamy - Madras High court