குற்றவாளி தண்டனையை அதிகரிக்கும் மசோதா பேரவையில் தாக்கல்., எத்தனை ஆண்டுகள் தெரியுமா?
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் குற்றவாளி தண்டனையை அதிகரிக்கும் மசோதாவை தாக்கல் செய்தார் அமைச்சர் சிவி சண்முகம்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று ஆளுநர் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், பதிலுரையும் நடைபெற்றது. இதன்பின் சட்ட மசோதா ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் குற்றவாளி தண்டனையை அதிகரிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
குற்றவாளிகளின் தண்டனையை அதிகரிப்பதற்கான மசோதாவை சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தாக்கல் செய்தார். பிரிவு 304-ல் வரதட்சணை தொடர்பான குற்றத்துக்கான தண்டனையை 7 லிருந்து 10 ஆண்டாக மாற்ற மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதுபன்று பிரிவு 354-ல் குற்ற நோக்கத்துடன் ஆடை களைதலுக்கான அதிகபட்ச தண்டனையும் 7 லிருந்து 10 ஆண்டாகிறது.