நவம்பர் மாதத்திற்குள் பாரத் நெட் திட்டம் செயல்படுத்தப்படும்- ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
இலங்கை கடற்படையால் 4 தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது.ஆளுநர் பேசுகையில்இலங்கை கடற்படையால் 4 தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.
2021 நவம்பர் மாதத்திற்குள் தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் பாரத் நெட் திட்டம் செயல்படுத்தப்படும்.சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்திற்கான செலவில் மத்திய அரசு 50 சதவீதத்தை ஏற்க வலியுறுத்துவோம் என்று பேசியுள்ளார்.