கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக, தான் பிச்சை எடுத்த ரூ.10000 பணத்தை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பிச்சைக்காரர் வழங்கிய செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்த பூல்பாண்டி என்பவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மதுரை வந்தார். இவர் கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களுக்கு தன்னால் ஈன்ற உதவியை செய்ய வேண்டும் என்பதற்காக, மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி சந்தை, பழச்சந்தை மற்றும் பூ மார்க்கெட்டில் கடந்த 15 நாட்களாக பிச்சை எடுத்து வந்தார்.
அப்பொழுது அவரிடம் ரூ.10,000 சேர்ந்தது. அதனை அவர் கொரோனா தடுப்பு நிதிக்கு வழங்க மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று அவரிடம் இன்று கொடுத்தார். அதனை கண்ட அங்கிருந்த பொதுமக்கள், அவரை கண்டு நெகிழ்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து பூல்பாண்டி கூறுகையில், அவர் கடந்த 40 ஆண்டுகளாக பிச்சை எடுக்கும் பணத்தில் பெரும்பகுதியை ஏறக்குறைய 400 பள்ளிகளுக்கு மேல் நாற்காலிகள், மேஜைகள், தண்ணீர் சுத்திகரிப்பான் உள்ளிட்ட பொருட்களை வழங்கி கொடுத்துள்ளதாக கூறினார். இதேபோல, மேலும் 10 மாவட்டத்திற்கு சென்று பிச்சையெடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ.10,000 ஐ வழங்க திட்டமிட்டுள்ளேன் என கூறினார். இவரின் இந்த செயலை மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…