பலாப்பழத்தை சேதப்படுத்தியதால் கரடியை தூக்கிலிட்டு சாகடித்து விவசாயி !
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள வலப்பூர்நாடு ஊராட்சியில் உள்ள ஓயாங்குழி கிராமத்தில் உள்ள ஒரு மரத்தில் ஆண் கரடி ஓன்று கழுத்தில் சுருக்கு கயிறு மாட்டிய நிலையில் இறந்தது தொங்கியது.
தகவல் அறிந்து அங்கு வந்த கொல்லிமலை வனத்துறையினர் கரடியை கயிற்றில் இருந்து கீழே இறக்கினர்.பின் கரடியை யார்? கொன்றது என்ற விசாரணையை ஓயாங்குழி கிராம மக்களிடம் நடத்தினர்.
அதில் இறந்த கரடி அடிக்கடி அங்கு உள்ள ஒரு பலமரத்தில் உள்ள பலாபழங்களை தின்று சேதப்படுத்தி வந்ததாகவும் ,இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயி ஒருவர் மரத்தில் சுருக்கு கயிறை மரத்தில் கட்டி வைத்து கரடியை கொன்றது தெரியவந்தது.கரடியை கொன்ற விவசாயியை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.