குளியலறையில் வழுக்கி விழும் சம்பவம்.! காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.!
கைதிகள் வழுக்கி விழுவது குறித்து பதிலளிக்க சென்னை காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்.
சென்னை மாநகர காவல்நிலையங்களின் குளியல் அறைகளில் விசாரணை கைதிகள் வழுக்கி விழுவது குறித்து பதிலளிக்க சென்னை காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் குளியலறைகளில் குற்றவாளிகள் வழுக்கி விழுந்தது தொடர்பாக எத்தனை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என்றும் காவல்துறையினர் வழுக்கி விழுந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளதா என்ற கேள்விகள் எழுப்பட்டிருக்கிறது.
மேலும் காவல் நிலையத்தில் உள்ள குளியலறைகளில் முழுமையாக பராமரிக்காத அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. குளியலறைகளில் வழுக்கி விழும் சம்பவங்களை தடுப்பதற்கு ஆணையர் என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என மாநில மனித உரிமை ஆணையம் கேட்டுள்ளது. இதனிடையே அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் ஜார்ஜ் மில்லருக்கு எதிராக புகார் அளித்த நாதமுனி என்பவரை அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றபோது குளியலறையில் வழுக்கி விழுந்ததாக வந்த தகவலின் அடிப்படையில், சென்னையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,.