சட்டவிரோதமாக பேனர் வைக்கமாட்டோம் என்று திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் தனது ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தபோது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.ஆனால் அவர் பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது.இதனால் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பான விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில், திமுக நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிக்கும் இடையூறு ஏற்படுத்தும் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் நீதிமன்றம் அரசிடம் சரமாரியாக கேள்விகளை முன் வைத்தது.பேனர் வைக்கமாட்டோம் என்ற அரசியல் கட்சிகளின் அறிக்கையை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்தது.
இந்த நிலையில் சட்டவிரோதமாக பேனர் வைக்கமாட்டோம் என்று திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதில், பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைக்க மாட்டோம் என்றும் பேனர் விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுகள் முறையாக பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…