தமிழக அரசு தடை விதித்திருப்பது மனிதநேயமற்ற செயல்.! டிடிவி தினகரன் கண்டனம் .!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,000 தாண்டியது.கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையெடுத்து தமிழகத்தில் அரசியல் கட்சிகளும் , தன்னார்வ சேவை அமைப்புகளும் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை யாரும் நேரடியாக வழங்க கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் டிடிவி தினகரன் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் ,கொரோனா நோய்க்கு எதிரான போராட்டத்தில் அரசியல் கட்சிகளும் , தன்னார்வ சேவை அமைப்புகளும் அரசுக்கு எல்லாவகையிலும் பக்கபலமாக இருந்து வருகின்றன. ஆனால் 20 நாட்களாக ஊரடங்கு தொடர்வதால் பல இடங்களில் அன்றாட வருமானத்தை நம்பி இருந்த தொழிலாளர்கள் ஏழை , எளிய மக்கள் பலரும் உணவுக்காக தத்தளித்து வருகின்றனர்.
அதனால் அவர்களுக்கு உதவ முன் வருகிறார்கள்.ஒடிசா , கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இதுபோன்ற சமுதாய உணவகங்களை ஏற்படுத்தி பசித்தவர்களுக்கு உணவு கொடுத்தால் மற்றவர்கள் ஏன் அதனை செய்யப் போகிறார்கள். தடுப்பு பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு முககவசங்களையும் ,தற்காப்பு மருத்துவ உபகரணங்களையும் அரசு வழங்கியிருந்தால் மற்றவர்கள் ஏன் அவர்களுக்கு கொடுக்கப் போகிறார்கள்.
இந்நிலையில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை யாரும் நேரடியாக வழங்க கூடாது என்று தமிழக அரசு தடை விதித்திருப்பது மனிதநேயமற்ற செயல் ஆகும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.