#BREAKING: இவற்றிக்கெல்லாம் தடை தொடர்கிறது- தமிழக அரசு..!
தமிழகத்தில் 31ம் தேதி வரை நீடித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 19-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில் மாநிலத்தின் கொரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு 31-7-2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.
- மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து (புதுச்சேரி நீங்கலாக)
- மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர சர்வதேச விமான போக்குவரத்து.
- திரையரங்குகள்
- அனைத்து மதுக்கூடங்கள்
- நீச்சல் குளங்கள்
- பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாயம் அரசியல் சார்ந்த கூட்டங்கள்.
- பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள்
- பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
- உயிரியல் பூங்காக்கள்
- நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
- இறுதிச் சடங்குகளில் 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.