பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீன் விடியலுக்கு முன்பு வந்த வெள்ளியைப் போன்றது – கி.வீரமணி

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் பேரறிவாளன். இவர் தற்போது பரோலில் வெளியே உள்ள நிலையில், தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும், மத்திய அரசு தரப்பில் வழக்குரைஞருக்கும் இடையே காரசார வாதங்கள் நடைபெற்று முடிந்த நிலையில் உச்சநீதிமன்றம் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், ஆசிரியர் கே.வீரமணி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘விடியலுக்கு முன்பு வந்த வெள்ளியைப் போல, பேரறிவாளனுக்கு நீண்ட காலமாக மறுக்கப்பட்டு வந்த நீதி இப்போது பெருமளவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இதற்கு ஒன்றிய அரசு எதிர்ப்பு தெரிவித்தாலும், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தலைமையிலே இருக்கக்கூடிய தமிழ்நாடு அரசு, தடையில்லாத அளவுக்கு ஒரு சூழ்நிலையை உருவாக்கியது முக்கிய காரணமாகும். இது வரவேற்கத் தகுந்த ஒன்று.’ என பதிவிட்டுள்ளார்.
இதற்கு ஒன்றிய அரசு எதிர்ப்பு தெரிவித்தாலும், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தலைமையிலே இருக்கக்கூடிய தமிழ்நாடு அரசு, தடையில்லாத அளவுக்கு ஒரு சூழ்நிலையை உருவாக்கியது முக்கிய காரணமாகும். இது வரவேற்கத் தகுந்த ஒன்று.
— Asiriyar K.Veeramani (@AsiriyarKV) March 9, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025