பின்னடைவு தற்காலிகமானது தான்-அன்புமணி
ஏற்பட்டுள்ள பின்னடைவு தற்காலிகமானது தான் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.
சந்திராயன் -2 விண்கலத்தின் முக்கிய வேலையான விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் போது 2.1 கி.மீ தொலைவில் தகவல் தொடர்பை இழந்தது.பின்னர் பிரதமர் மோடி குடியரசு தலைவர் உள்ளிட்டோர் விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.அதில், முயற்சி பெருமைக்குரியது. தற்போது ஏற்பட்டுள்ள பின்னடைவு தற்காலிகமானது தான்.
விண்வெளிக்கு மனிதர்களை அழைத்து செல்லும் .ககன்யான் உள்ளிட்ட அனைத்து அடுத்த கட்ட முயற்சிகளிலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றி பெற வாழ்த்துகள் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.