கொரோனா பாதித்த பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தை.. சில நிமிடத்தில் இறந்த சோகம்!

சென்னையில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் பிறந்த சில மணிநேரத்தில் இறந்ததால், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நேற்று 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 8,228ஆக அதிகரித்துள்ளது. மேலும், சென்னையில் 134 கர்ப்பிணி பெண்களுக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை, சூளையை சேர்ந்த நிறை மாத கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அவர் தனிமைப்படுத்தப்பட்டு, எழும்பூர் தாய்-சேய் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அவருக்கு பிரசவ வழி ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. அப்பொழுது பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஆனால் அந்த குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே இருந்துள்ளதாக மருத்துவர்கள் கூறினார்கள். இதனையடுத்து, அந்த குழந்தைக்கு ஓமாந்தூரார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் கொரோனா தொற்று இல்லையென தெரியவந்துள்ளது. குழந்தை இறந்த சம்பவம், அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025