பட்டியலினத்தை சேர்ந்தவரை காலில் விழ வைத்த ஆதிக்க சாதியினர்.
கடந்த சில காலங்களாக பட்டியலினத்தவர்களுக்கு எதிரான, உயர் சாதியினரின் ஆதிக்க செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள ஓலைக்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் பட்டியல் இன வகுப்பை சேர்ந்தவர்.
இவர் 100 செம்மறி ஆடுகளை வைத்து தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில், பால்ராஜின் ஆடுகள் அருகிலுள்ள ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிவசங்கு என்பவருக்கு சொந்தமான ஆட்டு பட்டிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இவர்கள் இருவருக்கு இடையே ஏற்கனவே முன்பகை இருந்து வந்துள்ளது. தனது பட்டிக்குள் ஆடு புகுந்ததால், சிவசங்கு அவரது உறவினர்களை அழைத்து பால்ராஜை தாக்கி, அவரை காலில் விழச் செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல், இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பரப்பியுள்ளார்கள்.
இதனையடுத்து, மாவட்ட எஸ்.பி-யிடம் பால்ராஜ், இந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ள நிலையில், நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு அளித்துள்ளார். இந்நிலையில், கயத்தார் காவல் நிலையத்தில் சிவசங்கு, சங்கிலிபாண்டி, உடையம்மாள், பெரியமாரி, வீரையா, மகேந்திரன், மகாராஜன் உள்ளிட்ட 7 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…